பக்தர்களுக்கான வசதிகள் :

இராஜகோபுரம் நுழைவாயிலில் பக்தர்கள் தங்கள் பாதங்களை நீரில் அலம்பிக் கொண்டு உள்ளே செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வயோதிகர்கள் ஓய்வாக அமருமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் ஏழை எளிய மக்களின் வசதிக்கேற்ப குறைந்த கட்டணம் வசூல் செய்யப்பட்டு திருக்கோயில் வளாகத்திற்குள் திருமணங்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருடந்தோறும் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.


வள்ளி மண்டபம்

இத்திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் தவிர, பிற சமய விழாக்கள், சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கும் ஏற்ற வகையில் பெரிய அளவில் மண்டபங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலுக்கென வெகு அருகில் நவீன குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட ”வள்ளித் திருமண மண்டபம்” பொதுமக்கள் உபயோகத்திற்காக குறைந்த வாடகை அடிப்படையில் விடப்பட்டுள்ளது. சுமார் இருபது பசுக்களுடன் இத்திருக்கோயிலுக்கென பிரத்தியேகமாக ”பசுமடம்” உள்ளது. அபிஷேகத்திற்கும் திருக்கோயில் உபயோகத்திற்கும் தேவைப்படும் பால் அனைத்தும் கோசாலை மூலமாக வரப்பெறுகிறது.


  • ரூபாய் 171500(வைப்புத்தொகை ரூ.20000 உட்பட) - (24 மணி நேரம்)
  • ரூபாய் 93500(வைப்புத்தொகை ரூ.10000 உட்பட) - (12 மணி நேரம்)
  • ரூபாய் 59500(வைப்புத்தொகை ரூ.10000 உட்பட) - (6 மணி நேரம்)

கருணை இல்லம் :

இத்திருக்கோயில் சார்பாக சூளைமேடு, அண்ணா நெடும்பாதை, அஞ்சுகம் துவக்கப்பள்ளி வளாகத்தில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.