திருவிழாக்கள் :

சித்திரை : கிருத்திகை மற்றும் சித்ரா பௌர்ணமி.
வைகாசி : ”விசாகம்” (பௌர்ணமி) 11 நாட்கள் வைகாசி விசாகம், பிரமோற்சவம் தேர் வீதியுலா.
ஆனி : கிருத்திகை - சுவாமி வீதி உலா
ஆடி : கிருத்திகை - சுவாமி வீதி உலா.
ஆவணி : கிருத்திகை - சுவாமி வீதி உலா விநாயகர் சதுர்த்தி.
புரட்டாசி : நவராத்திரி 9 நாட்கள் யாகசாலை அம்மன் சிறப்பலங்காரம் - விஜய தசமியன்று பரிவேட்டை உற்சவம் - சுவாமி வீதி உலா.
ஐப்பசி : 6 நாட்கள் கந்த சஷ்டி லட்சார்ச்சனை 10 நாள் கந்த சஷ்டி உற்சவம் - பெருந்திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம்.
கார்த்திகை : தீபம் ஏற்றுதல் - சுவாமி வீதி உலா.
மார்கழி : ஆங்கிலப் புத்தாண்டு - மாணிக்கவாசகர் 9 நாள் உற்சவம் -”ஆருத்ரா தரிசனம்”
தை : கிருத்திகை, தைப்பூசம்.
மாசி : கிருத்திகை - மாசி மகம் - வீதி உலா.
பங்குனி : பங்குனி உத்திரம் லட்சார்ச்சனை முடிந்து தொடர்ந்து 3 நாட்கள் தெப்போற்சவம் அனைத்து கிருத்திகை நாட்களிலும் சுவாமி வீதி உலா வரும்.


வைகாசி :

வைகாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா 11 நாட்கள் காலை , மாலையும் விமானப் புறப்பாடுடன் சிறப்பாக நடைபெறும். 7-ம் நாள் மீதுன லக்னத்தில் சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்த மரத்தேர் உலா வருவது வழக்கம். 11-ம் நாள் விடையாற்றி உற்சவம் தொடங்கி 10 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுப் பெறும்.


புரட்டாசி :-

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 9 நாட்கள் யாகசாலை அம்மன் சிறப்பலங்காரம் செய்து விஜயதசமியன்று பரிவட்டை உற்சவம் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெறும்.


ஐப்பசி :-

ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சஷ்டியில் முருகப் பெருமான் சூரணை சம்ஹாரம் செய்ததை முன்னிட்டு மகா கந்தசஷ்டியில் 6 நாட்கள் இலட்சார்ச்சனை நடைபெற்று 6-வது நாள் சஷ்டி அன்று இலட்சார்ச்சனை உச்சி காலத்துடன் பூர்த்தி அடைந்து மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் . 7-ம் நாள் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் புறப்பாடும் நடைபெறும். 8,9,10, 11-ம் நாட்கள் கந்தசஷ்டி உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.


மார்கழி :-

மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பித்து பௌர்ணமியை ஒட்டி வரும் திருவாதிரையில் 10-வது நாள் உற்சவத்தில் ஊல் உற்சவம் (ஆருத்ரா தரிசனம்) நடைபெறும்.


பங்குனி :-

பங்குனி உத்திர இலட்சார்ச்சனை 10 நாட்கள் நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று உச்சிக்காலத்தில் இலட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு மாலை அருள்மிகு வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடைபெறும். பின்னர் 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும்.முக்கிய திருவிழாக்கள் நீங்கலாக பிரதி மாத கிருத்திகையிலும் வடபழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஆடிக்கிருத்திகையும், தைப்பூசமும், மிகச்சிறப்பாக கொண்டப்படுகிறது.

© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.